“பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மக்கள் பயணிக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. இது தொற்றுநோயின் 4வது அலைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வார இறுதி தொடர் விடுமுறையின் போது மக்கள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதுடன், பொறுப்புடன் செயற்பட வேண்டும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
